‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன், புரொபோஸ் செய்த நிகழ்வு; கண்கலங்கிய தோழி

புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர், மேடையிலிருந்தவாறு, தன் தோழியிடம் அளவு கடந்த காதலை சொல்லினார். இது பற்றிய காதல் சமாச்சாரம் பார்ப்போம்..

சசிகுமார் ‘கருடன்’ படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிம்ரன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், பேசிக் கொண்டிருக்கும்போது, அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தனது தோழிக்கு நன்றி கூறினார். அப்போது அவர் பேசும்போது,

‘அகிலா இளங்கோவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அகிலா உன்னை எனக்கு 6-வது படிக்கும்போது இருந்தே தெரியும். 10-ம் வகுப்பிலிருந்து நாம் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக உள்ளோம். இந்த இடத்தில் நின்று கொண்டு உன்னிடத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயானு தான் கேட்கனும். ஐ லவ் யூ ஸோ மச்..

நான் எப்போது எல்லாம் மிகவும் மனமுடைந்து காணப்பட்டேனோ அப்போது எல்லாம் எனக்கு ஊக்கம் கொடுத்தவர் அகிலா. நான் இன்றைக்கு சிறந்த மனிதனாக இருக்க, எனது அம்மா எப்படி காரணமோ அதேபோல் அகிலாவும் ஒரு காரணம். நன்றிகள் அகிலா’ என அவர் தனது காதலை தெரிவித்தார்.

அபிஷன் ஜீவிந்த் காதலைச் சொன்னதும், அவரது தோழி அகிலா இளங்கோவன் எமோஷனலாகி அழுதுவிட்டார். இது தொடர்பான காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் காதல் அனலாய் பரவி வருகிறது.

friendshiplovetourist family movieஇயக்குனர் அபிஷன் ஜீவிந்த்காதல்