நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ.கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
- Advertisement -
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் மேற்கொண்டுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார்.
மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் இப்படத்தின் ‘Rise of Mahasakthi’ டீசர், பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன், அதன் டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.