சர்வதேச பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற தமிழ்ப்படம்..

கமர்ஷியல் கதைகள் ஒருபுறம் வருந்தாலும், விருதுகளுக்கான கதைகளும் வந்து அங்கீகாரம் பெறுகின்றன. அவ்வகையில், முன்னதாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம் சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்தது தெரிந்ததே

இந்நிலையில் பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கிய படம், ‘பிஎம்டபிள்யூ 1991’.

இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ள இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் 22 விருதுகளைப் பெற்றுள்ளது.

படம் பற்றி பொன்​முடி திரு​மலை​சாமி தெரிவிக்கையில், ‘உலகம் முழு​வதும் உள்ள அனைத்து மனிதர்​களுக்​கும் பொது​வான ஒன்று சைக்​கிள். ஒரு காலத்தில் அதை வைத்திருப்​பதே கவுரவமாகப் பார்க்​கப்​பட்​டது. ஒரு காருக்கு நிக​ராக அதை பலர் கருதி​னார்​கள். அதை மையப்​படுத்​தித் தான் இதன் கதையை உருவாக்​கினேன். இந்​தப் படத்தை திரையரங்​குகளில் வெளி​யிடும் பணி​கள் நடந்​து வருகின்​றன’ என்​றார்.

சில நேரங்களில் பான் இந்தியா படங்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகிறது என்பதும் கவனிக்கத்தக்கதுதானே.

the film won 22 awards at international film festivals
‘பிஎம்டபிள்யூ 1991awardsfilm festivalworld cinemaகதை