‘தலைவன் தலைவி’ படம் ஓடிடி.யில் வெளியீடு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படம், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது.

தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டது.

முழுமையாக குடும்பத்தை மையப்படுத்திய படம் என்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காமெடி காட்சிகளும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். முன்னதாக, சின்ன பட்ஜெட்டில் குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற குடும்பப் படங்களும் வெளியாகி வரவேற்பு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

thalaivan thalaivii movie to release on ott on august 22nd
actress nithya menondirector pandirajVijay Sethupathiதலைவன் தலைவிவிஜய் சேதுபதி