Browsing tag

story

சிரஞ்சீவியுடன் கார்த்தி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

கார்த்தி தற்போது ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படத்தில் இணைகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘டாக்கு மஹாராஜ்’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாபி. இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சிரஞ்சீவி – பாபி இருவரும் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அனில் ரவிப்புடி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் […]

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..

நயன்தாரா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளது. இதில், நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ […]

ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்குகிறார் நெல்சன்?

ரஜினி-கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மைதான் என சௌந்தர்யா ரஜினிகாந்தும் உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ‘கூலி’ படத்தின் எதிர்மறை விமர்சனத்தால் இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பது மாதிரியான கதைகள் இருக்கிறதா என சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக […]

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபெளசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள விஷயங்களை வைத்து எழுந்துள்ள பல கேள்விகளுக்கு இயக்குநர் ஹனு ராகவபுடி பதில் தெரிவிக்கையில், ‘திட்டமிட்டுதான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம். போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அவை ஆழமான பொருள் தருகிறது மற்றபடி, இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. பகவத்கீதையிலிருந்து எடுத்துக் கொண்டது, வெறும் தத்துவ […]

ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் நெல்சனா?

ரஜினி-கமல் இருவரும் தாங்கள் இணைந்து நடிப்பதை உறுதி செய்துவிட்டனர். ஆனால், இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கப்போவது இல்லை என பரவலாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘ஜெயிலர்-2’ செட்டில் ரஜினியிடம் நெல்சன் ஒரு கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் செய்திகள் வந்தது. நெல்சன் சொன்ன கதை ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான ஜாலியான கதை. […]

இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு தனுஷ், ஜி.வி.பிரகாஷ் பாராட்டு..

‘போர்த்தொழில்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் இப்படத்திலும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், ‘D54’ படத்துக்கும் அவரே இசையமைப்பாளர். இந்நிலையில், இப்படம் குறித்து தற்போது பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ், […]

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது பிரபாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 1940-களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள […]

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து சௌந்தர்யா அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி-கமல் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் உடனிருந்தார். அப்போது சௌந்தர்யாவிடம் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கப்போகும் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

‘ஆர்யன்’ திரைப்படம் பற்றி விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து விஷ்ணு விஷால் தெரிவிக்கையில், ‘க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக அனைவரும் ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுவார்கள். அதை தடுக்க இயலாது. இது அனைத்து மொழி த்ரில்லர் படங்களுக்கும் பொருந்தும். நானே ‘ராட்சசன்’ படத்தை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், ‘ஆர்யன்’ மூலம் […]

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தபட அப்டேட்ஸ்..

‘மத​ராஸி’ படத்தை அடுத்​து, சிவ​கார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்​கரா இயக்​கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார், மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் தயாரித்துள்ள இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். ரவி கே.சந்​திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1960-களில் நடக்​கும் படமான இது, கல்​லூரி பின்​னணி​யில் நடக்​கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்​டது. அடுத்த ஆண்டு ஜனவரி14-ந்தேதி இப்படம் வெளி​யாக இருக்​கிறது. […]