ரஜினி-கமல் இருவரும் தாங்கள் இணைந்து நடிப்பதை உறுதி செய்துவிட்டனர். ஆனால், இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கப்போவது இல்லை என பரவலாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
‘ஜெயிலர்-2’ செட்டில் ரஜினியிடம் நெல்சன் ஒரு கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் செய்திகள் வந்தது. நெல்சன் சொன்ன கதை ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான ஜாலியான கதை. அதே சமயம் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொண்ட கதை எனவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் முழு கதையையும் எழுதி ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை முடிக்க ஒரு சில மாதங்கள் எடுக்கும் என நெல்சன் கூறியிருக்கின்றார். அந்த இடைவெளியில் ஒரு படம் பண்ணிவிடலாம் என முடிவெடுத்த ரஜினி, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு முடிவடைந்து, ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இச்சூழலில், நெல்சன் தான் ரஜினி-கமல் படத்தை இயக்கப் போகின்றாரா? என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.