Browsing tag

story

‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற காதல்-நட்பு குறித்து திருமாவளவன் கருத்து..

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ படம் வரவேற்று பெற்று வருகிறது. இப்படம் தற்போது 100 கோடி வசூலையும் கடந்துள்ளது. இந்நிலையில், ‘டியூட்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் படத்தின் இயக்குநரைப் பாராட்டியுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதலை மையமாகக் கொண்டு ‘டியூட்’ திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிராகவும் பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பொருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவையில்லை. இரு மனங்கள் போதும் என்ற வரையறையை […]

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் கதை..

அறி​முக இயக்​குநர் எஸ்.ஜெ.என்​.அலெக்ஸ் பாண்​டியன் இயக்கியுள்ள படம், ‘கிறிஸ்​டினா கதிர்​வேலன்’. கவுஷிக் ராம், பிர​தி​பா, சிங்​கம் புலி, கஞ்சா கருப்​பு, ஜெயக்குமார் முக்​கிய வேடங்​களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்​சுமி ட்ரீம் ஃபேக்​டரி சார்பில் டாக்​டர் ஆர். பிரபாகர் ஸ்த​பதி தயாரித்​துள்ள இப்படத்தை மிஸ்​டர் டெல்டா கிரியேஷன்ஸ் சார்​பில் கார்த்​திக் வீரப்பன் இணை தயாரிப்பு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்​தன் இசையமைத்​துள்​ளார். பிரஹத் முனிய​சாமி ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். நவம்பர் 7-ந்தேதி வெளி​யாகும் இப்படத்தின் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. நடிகர் […]

தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் நடிகர் ஆரவ்..

‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படம் மூலம் ஹீரோவானார். பின்னர் ‘ராஜபீமா’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரவ், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்த ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்தார். அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் நடித்திருந்தார். இவர் இப்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் […]

ஹீரோவாக நடிக்கும் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடி யார் தெரியுமா?

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் உடன் யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, இப்படத்தின் நாயகியாக வாமிகா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இவர் தமிழில் ‘மாலை […]

‘ஆர்யன்’ படம் தொடர்பாக, விஷ்ணு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’. இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்காக நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நாயகனாக நடித்து ’ஆர்யன்’ படம் வெளியாகியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அறிக்கையின் முடிவில், ‘சில படங்கள் பார்க்கும்போது மூளையை வீட்டிலேயே விட்டுவிடுங்கள் என்று மக்கள் அடிக்கடி சொல்வார்கள். ’ஆர்யன்’ படத்தைப் பொறுத்தவரை உங்கள் சிந்தனையை விட்டுவிட்டு […]

விஷால் நடித்து இயக்கிய ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை […]

‘சக்தித் திருமகன்’ பட கதை திருட்டு விவகாரம்: இயக்குநர் விளக்கம்..

அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார். இதனிடையே, இக்கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ‘தலைவன்’ என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குறிப்பிட்டிருந்தார். சுபாஷ் சுந்தரின் பதிவு […]

விஜய் சேதுபதிக்கு பதிலாக சூரி: ‘அயலான்’ பட இயக்குநர் திட்டம்..

‘மாமன்’ படத்திற்கு பிறகு சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘அயலான்’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்குவதாக இருந்தார் ரவிக்குமார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இறுதியாக, தற்போது சூரி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. சூரி-ரவிக்குமார் இணையும் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் […]

சமந்தா நடிக்கும் புதிய படத்தின் கதை..

‘மா இண்டி பங்காரம்’ படத்தின் கதைக்களம. பற்றிப் பார்ப்போம்.. நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப் படாமல் இருந்தது. இதற்கிடையே அவர் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பை இப்போது தொடங்கி இருக்கிறார். இதை நந்தினி ரெட்டி இயக்குகிறார். […]

கதாநாயகியை தேர்வு செய்யும் விதம்: மிஷ்கின் சர்ச்சை பேச்சு..

இயக்குநர் மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகராகவரும் முத்திரை பதிக்கிறார். இந்நிலையில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம், வருகிற 31-ந்தேதி திரைக்கு வருகிறது. சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, ‘படத்தின் கதாநாயகி மாளவிகா மனோஜ் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறார். முகத்தை பார்த்து டைரக்டர் தேர்வு செய்யவில்லை. ஆடிஷன் செய்து […]