‘போர்த்தொழில்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
தனுஷ் இப்படத்திலும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், ‘D54’ படத்துக்கும் அவரே இசையமைப்பாளர். இந்நிலையில், இப்படம் குறித்து தற்போது பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ், ‘பிளாக்பஸ்டர் படம். ரைட்டிங் மற்றும் ஆடியோ ஆன்வே. மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநராகி உள்ளார் விக்னேஷ் ராஜா. சைலண்ட் கில்லர்’ என தெரித்துள்ளார்
இதனிடையில் இந்த படம் இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை பார்த்த தனுஷ், முழுக்க முழுக்க இது உங்களுடைய படம். விருதுகளையும் இப்படம் அள்ளும்’ என விக்னேஷ் ராஜை பாராட்டியுள்ளார்.