‘மதராஸி’ படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார், மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
1960-களில் நடக்கும் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது. அடுத்த ஆண்டு ஜனவரி14-ந்தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதேபோல் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.