Browsing tag

parasakthi movie

ஓடிடி.யில் ‘பராசக்தி’ படம் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி திரையரங்குகளில் வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றது. 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு சுமார் 30 கட்கள் சென்சார் தரப்பில் அளிக்கப்பட்டது. சென்சார் சொன்ன மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டது படக்குழு. படத்தின் ஓடிடி ரிலீஸிலும் சென்சார் வெர்ஷன் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய ஜீ 5 நிறுவனம், படத்தின் அன்சென்சார்டு வெர்ஷனை வெளியிட்டு உள்ளது. […]

‘பராசக்தி’ படம் ஓடிடி ரிலீஸ் வழக்கு: ஐகோர்ட் தள்ளிவைப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்ஸார் பிரச்சினையில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 1965-ம் […]

கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..

பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவிருக்கும் படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. கேஜிஎஃப், சலார், காந்தாரா போன்ற மிகப்பெரிய படங்களை தயாரித்து மாபெரும் தயாரிப்பு நிறுவனமான உருவெடுத்துள்ள ஹோம்பல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தை கன்னட இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கி பிரபலமானார் சந்தோஷ் ஆனந்த்ராம். இவர் ஏற்கனவே ஹோம்பல் […]

‘கரேத்தே பாபு’ டீசர் வெளியீடு: ரவிமோகனின் மிரட்டல் நடிப்பு, வைரல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது தெரிந்ததே. இப்படத்தில் ரவிமோகனின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவ்வகையில் அவர் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் பற்றிப் பார்ப்போம்.. கவின் நடிப்பில் ‘டாடா’ படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‘கராத்தே பாபு’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வரும் கோடை விடுமுறைக்கு யாரு வந்தாலும் பரவாயில்லை, […]

எதிர்மறையாய் விமர்சிக்காதீர்கள்: ‘பராசக்தி’ படக்குழு காட்டம்..

‘இது போட்டி அல்ல’ என பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் புரொடியூசர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் 9-தேதியும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் 10-ந்தேதியும் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது. ’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. […]

பொங்கலை முன்னிட்டு, அடுத்தடுத்து 4 திரைப்படங்கள் ரிலீஸ்..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’ படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. மற்றொரு படமான பராசக்தி படம் திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. ஜனநாயகன் விலகலுக்கு […]

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கமல் பாராட்டுக் கடிதம்..

ஹிந்தி திணிப்புக்கு எதிரான கதைக்களம் பராசக்தி படம் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கமல் வெளியிட்டுள்ள கடிதம் காண்போம்.. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன். அந்தக் கடிதத்தில், ‘துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, […]

நாளை ‘பராசக்தி’ ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..

ஜனநாயகன் படத்திற்கு நேர்ந்த ரிலீஸ் விவகாரம்போல, பராசக்தி படத்திற்கு வந்துவிடுமோ என எண்ணப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்தை, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ […]

ரிலீஸ் விவகாரம்: ஜனநாயகன்போல பராசக்தியும் நீதிமன்றத்தை நாடுகிறதா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இன்பன் உதயநிதி வழங்குகிறார். இந்நிலையில், நாளை மறுநாள் ரிலீஸ் இருக்க இதுவரை பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை. நாளைக்குள் சென்சார் போர்டு சான்று கொடுத்துவிடும் என்று பராசக்தி படக்குழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் பராசக்தி டீம் தொடர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளால் ரிவைஸிங் குழுவுக்கு […]

ஜனநாயகனை முறியடித்து பராசக்தி புதிய சாதனை..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வைரலாகி வருகிறது. அதாவது வெளியான 24 மணி நேரத்தில் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் […]