Browsing tag

Rajinikanth

ரஜினியின் ‘கூலி’ படமா? விஜய்யின் ‘ஜனநாயகனா?’: கோலிவுட் பரபரப்பு

தமிழ் சினிமாவில், முதல் சாதனை படைக்கவிருக்கும் படம் எது? என காண்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ ஷீட் சில நாட்களில் நிறைவு பெறுகிறது. ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொல்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் அல்ல என படக்குழு உறுதி அளித்துள்ளது. அதே நேரம் இப்டம் அரசியல் எழுச்சியாக அமையும் எனவும் கூறப்படுகிறது. அவ்வகையில், பாடல்கள் முழங்கும் எனவும் எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில், […]

ரஜினியின் ‘கூலி’ பட சிங்கிள் பாடல் வெளியீடு அப்டேட்ஸ்

‘கூலி’ படத்தின் மியூஸிக் அப்டேட் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் 3 என்ற படத்தில் அறிமுகமாகி, ‘கொலைவெறி’ பாடலின் வாயிலாகவும் பிரபலமானவர் அனிருத். அதனைத் தொடர்ந்து, ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்காலிகமாக இசைத்துறையில் இருந்து விலகிய நிலையில், அனிருத் காட்டில் அடைமழை. செம பிஸி.! தற்போது, தொடர்ந்து ரஜினியின் கூலி, விஜய்யின் ஜனநாயகன் என ஓடிக் கொண்டிருக்கிறார். முன்னதாக வெளியான விஜய் நடித்த ‘கோட்’ படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் […]

எனக்கு பேரழிவே ரஜினியுடன் நடித்த திரைப்படம்தான்: மனிஷா கொய்ராலா அதிரடி

ஸ்லிம் உடல்வாகுடன் சிலிர்ப்பான நடிப்பில் கவர்ந்தவர் மனீஷா கொய்ராலா. பாலிவுட்டில் தற்போதும் பட வாய்ப்புகளைப் பெற்றுவரும் நடிகையாக இருக்கிறார். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ‘பாபா’ படம் பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளது தற்போது பரபரப்பாக தெறிக்கிறது. ‘நான் பாலிவுட்டில் அதிக படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது […]

ரஜினியை தொடர்ந்து, அஜித்துடன் இணைகிறார் மோகன்லால்

‘தல’ அஜித்தின் அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்.. அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆனால், அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. முதலில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில், அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் […]

ரஜினி பற்றி கமல் பேசிய நிகழ்வு; வைரல்

தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகள் சூப்பர் ஸ்டார் ரஜினி, விண்வெளி நாயகர் கமல்ஹாசன் என்பது தெரிந்ததே. ரஜினிக்கும், கமலுக்கும் 70 வயதுக்கு மேலாகிவிட்டது. ஆயினும் மனதால் கலைத்துறையில் களைப்பில்லாமல் உழைப்பதும் அசாத்திய சாதனையே. இந்த வயதிலும் இவர்கள் தொடர்ந்து நடித்து வருவதும், தேடலில் இருப்பதையும் கண்டு ரசிகர்களும், வளர்ந்து வரும் இளைய நடிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இந்நிலையில், ரஜினிக்கு கூலி, ஜெயிலர்-2 படங்கள் நடைபெற்று வருகின்றது. கமலுக்கு, ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து அன்பறிவு (சகோதரர்கள்) […]

இயக்குனர் நெல்சனுக்கு, ரஜினிகாந்த் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் உருவாகி வருகிறது. இப்படத்தில், முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், முதல் பாகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தவிர்த்து வேறு சில முக்கிய கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். அவ்வகையில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது மற்றொரு முக்கியமான சிறு கதாபாத்திரத்தில் […]

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ஹெச்.வினோத்?

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குனர் ஹெச்.வினோத்தும் இரண்டு முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதனால், விரைவில் இருவரும் புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது. நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்குப் பிறகு, யாருடைய இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது ரஜினி – ஹெச்.வினோத் இருவரும் சந்தித்த […]

விஜய்யின் ‘லியோ’ சாதனையை முறியடித்தது ரஜினியின் ‘கூலி’ படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூலி படத்துக்காக அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடிய ‘சிக்கிட்டு’ பாடல் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புரோமோ வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் டி ராஜேந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், அப்படத்தின் […]

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில்,ஸ்ருதிஹாசன், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் […]

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் ரோல் மீண்டும் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ பட வில்லனை மறக்க முடியாது. மலையாள நடிகரான விநாயகன் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஷாலின் ‘திமிரு’ மற்றும் காளை, சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், அவருக்கு ஜெயிலர் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயிலர் படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால், முதல் பாகத்தில் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல கதை அமைந்திருக்கும். இந்நிலையில், ஜெயிலர்-2 படம் உருவாகிறது […]