‘கூலி’ படத்தில் ரஜினியுன் மோதும் அமீர்கான்; அந்த 15 நிமிடம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது.

இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அமீர்கான் கவுரவ வேடத்தில் நட்புடன் கலக்க வருகிறார். கதாபாத்திரமாக தோன்றவில்லை.

படத்தில் 15 நிமிடங்கள் வருகிறார். பார்க்க க்யூட்டாக இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் அசத்துவார்.

அவ்வகையில், ரஜினியுடன் அனலாய் மோதியிருக்கிறார் அமீர்கான். அந்த 15 நிமிடமும் தீயாக இருக்கும். இந்த மோதல் காட்சியை ராஜஸ்தானில் படமாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர்கானுக்கு ரூ. 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, படத்தில் வரும் ‘சிகிடு’ ஸாங் வீடியோ ரிலீஸாகி வைரலாகி வருகிறது. விமர்சனங்களும் கலவையாய் நிறைந்து வழிகிறது.

coolie moviedirector lokesh kanagarajRajinikanthஅமீர்கான்ரஜினிகாந்த்