விஜய்யின் ‘லியோ’ சாதனையை முறியடித்தது ரஜினியின் ‘கூலி’ படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கூலி படத்துக்காக அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடிய ‘சிக்கிட்டு’ பாடல் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் புரோமோ வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் உடன் டி ராஜேந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில், அப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது ‘கூலி’ படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை 81 கோடிக்கு விற்பனை செய்து புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஓவர்சீஸில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்கிற சாதனையை கூலி படைத்துள்ளது. இதற்கு முன்னர், விஜய்யின் லியோ படம் 66 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக அண்மையில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அவற்றையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக 81 கோடிக்கு ஓவர்சீஸ் ரைட்ஸை விற்பனை செய்து மாஸ் காட்டியுள்ளது ‘கூலி’ படக்குழு.

actor vijaycoolie movieRajinikanthடி.ராஜேந்தர்ரஜினிகாந்த்