Browsing tag

life

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை; கவுரவிப்பு..

தமிழ் சினிமாவில் கானா பாடல்களால் தனித்த முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர். மேலும் இவரது இசையமைப்பில் வெளியான பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, வாலி, நேருக்கு நேர், குஷி, காதல்கோட்டை போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தேவா கூறும்போது, ‘செப். 24-ந்தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் […]

எனது உரிமைகளை பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு நன்றி: நடிகர் நாகார்ஜுனா..

அறிவியல் தொழில் நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்து வருகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவரும். அருவருக்கத்தக்க வகையில் கையாள்பவரும் உண்டு. அவ்வகையில் இதோ ஒரு வழக்கு.. நாகார்ஜுனா அவரின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது நாகார்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘நடிகரை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ பரப்பப்பட்டு பணமாக்கப்படுகிறது. ஏஐ மாடல்களைப் பயிற்றுவிக்கக் கூட நடிகர் நாகர்ஜுனாவின் […]

அம்மா அளவுக்கு என்னால் வரமுடியாது: ஜான்வி கபூர் ஓபன் டாக்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும் இல்லை என விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. இது எல்லாம் ஜான்வி கபூருக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவை பெருமை அடையச் செய்ய முயற்சிக்கிறார். அவரின் […]

நடிகர் பாலா மீது அவதூறு: சீமான் காட்டம்..

நடிகர் பாலாவுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ […]

அனுஷ்கா பாணியில் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த திடீர் முடிவு..

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைஃப்’, ‘மாமன்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் ‘இந்த துறையில் செயல்பட சமூக ஊடகங்கள் அவசியம் என நினைத்திருந்தேன். பணிபுரியும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன். […]

எனது பயணம் முடிவடையவில்லை, தொடக்கமே: விஷால் அறிக்கை..

தமிழ்த்திரையில் ‘செல்லமே’ படம் மூலம் அறிமுகமானவர் விஷாலின் திரைப் பயணம் 21 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், ‘இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கும், என் குருநாதர் அர்ஜுன் அவர்களுக்கும், லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் இராஜநாயகம் அவர்களுக்கும், மேலும் என்னை உயர்த்தி அழகு பார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியினை […]

எங்கே செல்கிறேன்?: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டாலும், போஸ்ட் போட்டாலும் அது வைரலாகி விடுகிறது. அவ்வகையில் திரிஷா ‘தான் விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, எங்கே செல்கிறேன்?’ என கேட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை நிரப்பிவிட்டார்கள். எங்கே போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுவிட்டு, துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கலாம். இல்லை, வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லலாம். […]

‘சூர்யா-28’ : ரசிகர்கள் வரவேற்பு..

சினிமாவில் பின்னணி பலம் இருந்தாலும், தன்னை முன்னுறுத்தி தனித்த முத்திரை பதித்த நடிகர் சூர்யா. ‘அகரம்’ என பொதுவாழ்விலும் மனிதநேய மாமனிதர் தானே.! தற்போது, சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். அவரின் முதல் படமான வஸந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் வஸந்த் மற்றும் படக்குழுவினர் சூர்யாவிற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க, அவர் இப்படத்தில் நடித்து முடித்தார். அதன் பிறகு […]

இசைப்புயலாக கலக்கும் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? அவரே சொன்ன தகவல்..!

ஏ.ஆர் ரகுமான் அவரது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில […]

நடிகர் ரவிமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்..

ரவிமோகன் தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், ‘கரேத்தே பாபு’ படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். இந்நிலையில், ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர். தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவிமோகன் வெளியிட்டார். ‘டிக்கிலோனா’, […]