ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை; கவுரவிப்பு..

தமிழ் சினிமாவில் கானா பாடல்களால் தனித்த முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர். மேலும் இவரது இசையமைப்பில் வெளியான பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, வாலி, நேருக்கு நேர், குஷி, காதல்கோட்டை போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தேவா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தேவா கூறும்போது,

‘செப். 24-ந்தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் என்னை வரவேற்றனர். அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது.

அந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். இதற்காக லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி’ என கூறியுள்ளார்.

music director deva honored in australian parliament
awardslifemusic director devaஇசையமைப்பாளர் தேவாநாடாளுமன்றம்