Browsing tag

விஜய்

பொங்கலை முன்னிட்டு ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படம் வெளியீடு..

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் சிறுபட்ஜெட் படம் பற்றிப் பார்ப்போம்.. மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. ‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலிகான், சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடிக்கிறார். ‘இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட கதாநாயகனும் கதாநாயகியும் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு வரும் தடைகளைக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. எப்போது தெரியுமா?

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் சூர்யா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இயக்குனர் சித்திக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி […]

தனது சம்பளம் பற்றிய சர்ச்சைகளுக்கு, மமிதா பைஜு விளக்கம்..

ஹெச்.வினோத் இயக்கி வரும் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருக்கிறார் மமிதா பைஜு. விஜய்யுடன் சேர்ந்து நடிக்க கொடுத்து வைத்திருப்பதாகவும், ‘ஜனநாயகன்’ வாய்ப்புக்காக சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்தில் நடிக்க மமிதா பைஜுவுக்கு ரூ.15 கோடி சம்பளம் என வலைதளங்களில் பேசப்பட்டது. முன்னணி ஹீரோயின்களான திரிஷா, நயன்தாராவுக்கே இதுவரை படம் ஒன்றுக்கு ரூ.15 கோடி சம்பளம் கிடைத்தது இல்லை. […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும், ரிலீஸில் எந்த மாற்றமும் இருக்காது என சொல்லப்படுகின்றது. மேலும், இப்படத்தின் திரையரங்க உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்க போட்டி நிலவி வருகின்றது. ஒருபக்கம் லலித், ஏ.ஜி.எஸ் மறுபக்கம் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என ‘ஜனநாயகன்’ ரைட்ஸை வாங்க பலர் போட்டி போட்டனர். இதில் லலித் மற்றும் ராகுல் இடையே கடும் போட்டி […]

பிரதீப் ரங்கநாதன் பேச்சுக்கு, அஜித்-விஜய் ரசிகர்கள் வரவேற்பு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பிரதீப் நடுத்து முடித்துள்ள ‘டியூட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேசிங் சென்றுவிட்டார். இனி அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் சார் மற்றும் அஜித் சார் ஆகியோருடைய இடைவெளியை யாராலும் நிரப்பவோ அல்லது மாற்றவோ முடியாது. அவர்கள் […]

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட ஹீரோ..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் பக்கா கம்ரஷியலி்ல் உருவாகி வருகிறது. இப்படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் ஓர் இயக்குனராக அவரின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரம் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. அதாவது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே பாலாஜி ‘குட் நைட்’ பட புகழ் மணிகண்டனை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார். சமீபத்தில் மணிகண்டன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி சந்தித்து கதை பற்றி பேசினர். ‘கருப்பு’ படத்திற்கு பிறகு உடனடியாக இந்த […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

கரூரில் விஜய்யின் அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், விஜய்மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்தன என்பது தெரிந்ததே. எனவே, இம்மாதம் வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தின் சிங்கிள் பாடல் தள்ளிப்போனதாக சொல்லப்படுகின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ சிங்கிள் வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் பாடல் வெளியிடுவது சரியாக இருக்காது என தள்ளி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தற்போதைக்கு […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட புது போஸ்டர் வெளியீடு..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ரவிமோகன் வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் […]

கரூரில் விஜய் பிரச்சாரம்: ஸ்ருதிஹாசன் மறைமுக விமர்சனம்?

விஜய்யை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என பார்ப்போம்.. ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரி என ஒரு ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்து உள்ளனர். அந்த ஸ்டோரியில் கூறியிருந்ததாவது, ‘ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது. சர்க்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏதோ பொதுவாக ஸ்டோரி போட மக்களோ அது தவெக விஜய் கரூருக்கு போனதை தான் விளாசியிருக்கிறார் […]

கரூர் துயரச் சம்பவம்: ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் ஒத்திவைப்பு..

தளபதி விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசியல் பேசும் திரைப்படம் ‘ஜனநாயகன்’ இப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் சிறிய டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரூர் துயரச் சம்பவத்தினால் தற்போது இப்பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு. கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 110 பேர் […]