இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ரவிமோகன் வருகிறார்.
இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்படுவதால் ‘பராசக்தி’ திட்டமிட்டபடி பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் வெளியாக இன்னும் 100 நாள்களே உள்ள நிலையில், ‘பராசக்தி’ படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது.