Browsing tag

விஜய்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட கிளைமாக்ஸ் முடிந்ததும் ‘பிரியாவிடை’ சீன்ஸ்?

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’ என்ற பாடல் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த ‘சிங்கிள்’ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல்-சேட்டிலைட் உரிமைகள் பெரிய அளவில் விற்பனையாகி உள்ளன. தற்போது இப்படத்தின் வெளியீடு தொடர்பாக, தமிழக வியாபார உரிமைக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ கிளைமாக்ஸ் காட்சி குறித்து […]

விஜய்-அஜித் இருவருக்கும் உள்ள வித்தியாசம்: இயக்குநர் பேரரசு ஓபன் டாக்..

‘மங்காத்தா’ படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்தால் அஜித் மிக ஜாலியான மனிதர் என்பது தெரிய வரும். ஆனால் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். தற்போது இருவரும் சீரியஸான மனிதர்களாக மாறிவிட்டனர். அஜித், தற்போது கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அதனை முடித்துக்கொண்டு அடுத்ததாக ஆதிக் இயக்கத்தில் தயாராகவுள்ள ‘ஏகே64’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்கவிருக்கின்றது. மறுபக்கம், அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய், தன் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சிக்கல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெற்றிருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு […]

ஜனநாயகன், பராசக்தி படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..

ஜனநாயகன், பராசக்தி இவ்விரு படங்களும் அரசியல் ரீதியான களம் கொண்ட கதைகள். இப்படங்களின் தற்போதைய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறுகளை மையமாக வைத்து ‘பராசக்தி’ என்ற படம் உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா. சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, […]

தேர்தலுக்கு பிறகு, விஜய் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளாரா?

ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்தது தெரிந்ததே. இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு படங்களில் நடிப்பதற்காக விஜய் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாரா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில், ‘விஜய்க்கு அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லை. அவரின் முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது. இது வெறும் வதந்தி’ என்றார். இருப்பினும், விஜய் ரசிகர்களுக்கு அவர் மீண்டும் படங்களில் […]

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது. அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இதுவரை ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது. மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடல்; இந்திய அளவில் முதலிடம்..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ அரசியல் பேசும் படமாக உருவாகி வருவது தெரிந்ததே. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரு சில மணி […]

என்றுமே விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்: அஜித் விளக்கம்..

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை நிகழ்த்தி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் விவகாரம் குறித்து அஜித்குமார் தெரிவித்த பேட்டி வைரலானது. அஜித் கூறுகையில்,’ ‘கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் […]

விஜய்யின் அறிமுகப் பாடல் நாளை வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய போஸ்டர் செம வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ முதல் பாடல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து ‘ஜனநாயகன்’ படத்துடைய முதல் பாடல் நாளை சனிக்கிழமை 8-ந்தேதி தேதி முதல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையில், இப்படத்துடைய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் மக்களுக்கு இடையில் முறுக்கு மீசை மற்றும் கண்ணாடியுடன் மிரட்டலான லுக்கில் விஜய் […]