விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இதுவரை ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது. மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார்.

பணத்தை மையமாக வைத்து ஆக்சன் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ’டைட்டில்’ தற்போது வெளியாகி உள்ளது. அவ்வகையில், இப்படத்திற்கு ‘சிக்மா’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்படப் படிப்பு பயின்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.

title of jason sanjay new film released
actor vijayjananayagan moviejason sanjayவிஜய்ஜேசன் சஞ்சய்