Browsing tag

கதை

சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதைக்களம்..

அதென்ன ‘ஹவுஸ் மேட்ஸ்’? என்பது பற்றி படத்தின் இயக்குநர் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார். எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.இப்படம், ஆக.1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் தெரிவிக்கையில், ‘ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு […]

கடந்தகால தோல்விகளை வைத்து, இயக்குநரை எடை போடுவதில்லை: விஜய் சேதுபதி பேச்சு..

விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘எனக்கு கதைப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்‌ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் […]

ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் அப்டேட்ஸ்..

ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியாகி இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாபு விஜய் படம் குறித்து தெரிவிக்கையில், ‘இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சினை ஒன்றை மையமாக வைத்து, காதல் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகி இருக்கிறது. ஒருவன் வாழ்வில் […]

ரவிமோகன் பற்றி, சித்தார்த் தெரிவித்த தகவல்..

நடிகர் சித்தார்த் 3 BHK படத்தில் ஹீரோவா நடித்திருக்கிறார். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. படத்தில் சரத்குமார், தேவயானி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, ‘சித்தார்த் நல்ல கதைகளையே தேர்வு செய்வார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். இப்படம் பாலுமகேந்திராவின் ‘வீடு’ படம் போல பேசும்படி அமையும்’ என்றார். இதனைத் தொடர்ந்து சித்தார்த் பேசுகையில், எடிட்டர் மோகன் வீட்டில் ரவி […]

இப்ப வாடகை வீட்டில் இருப்பதால் ‘3 பிஹெச்கே’ படம் எனக்கு கனெக்ட் ஆகுது: ரவிமோகன் விமர்சனம்..

‘3 பிஹெச்கே’ படம் குறித்து, ரவிமோகன் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. சித்தார்த் ஹீரோவாக நடிந்துள்ள ‘3 பிஹெச்கே’ படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தேவ​யானி, யோகி​பாபு, மீதா ரகு​நாத், சைத்ரா உள்​பட பலர் நடித்துள்ளனர். சாந்தி டாக்​கீஸ் சார்​பில் அருண் விஸ்வா தயாரித்​துள்ள இதன் டிரெய்லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் கலந்​து​கொண்ட ரவி மோகன் பேசும்​போது, ‘இந்​தப் படத்​தைப் பார்த்து​விட்​டேன். பாலு மகேந்​திரா​வின் ‘வீடு’ எந்​தளவுக்​குப் பேசு பொருளாக அமைந்ததோ, அதுபோல இந்​தப் […]

வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் தாமதத்திற்கு காரணம்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ பட தகவல்கள் காண்போம் ‘வாடிவாசல்’ தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கோலிவுட்டில் கூறப்படுகிறது. இது குறித்து சூர்யா, வெற்றிமாறன் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது, சூர்யா தரப்பில் இருந்து முழுமையான கதையைக் […]

தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ படம் பற்றி பப்ளிக் ரிவ்யூ

தனுஷ் நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்தின் பப்ளிக் விமர்சனம் பற்றிப் பார்ப்போம்.. * ரசிகர் ஒருவர் தெரிவிக்கையில், ‘படத்தின் முதல் பாதியோடு ஒப்பிடும்போது இரண்டாம் பாதி படம் சூப்பராக உள்ளது. படம் முழுவதும் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலரும் நன்றாக நடித்துள்ளார்கள். படம் மூன்று மணி நேரம் ஓடினாலும் நன்றாக உள்ளது. தனுஷின் நடிப்பு தான் படமே’ என தெரிவித்துள்ளார். * மற்றொரு ரசிகர் கூறும்போது, ‘தனுஷ் […]

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தின் கதை குறித்து, கமல்ஹாசன்..

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியானால் கதைக்களம் மேலும் தெரிய வரும். முன்னதாக, கமல்ஹாசன் தெரிவித்த கதை பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, வரும 17-ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ கதை குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த படத்தின் கதையை […]

சசிகுமார் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியை தொடர்ந்து, ‘ஃப்ரீடம்’ படம் ரிலீஸ்..

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பது போல சசிகுமார் நடித்து வெளியாகும் அடுத்த படத்தின் தகவல்கள் காண்போம்.. சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அபிஷன் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ படம் ஜூலை 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. […]

கதை-கலாச்சாரத்தில், எந்த நாடும் இந்தியாவை நெருங்கவில்லை: ராஜமவுலி பெருமிதம்..

‘கதை சொல்லுதலில் இந்தியாவின் டிஎன்ஏ-வை உலகில் எந்த நாடும் நெருங்கவில்லை’ என இயக்குனர் ராஜமவுலி பெருமையுடன் பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு “வேவ்ஸ்” உச்சி மாநாடு மும்பையில் தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்துகொண்டு […]