சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதைக்களம்..

அதென்ன ‘ஹவுஸ் மேட்ஸ்’? என்பது பற்றி படத்தின் இயக்குநர் தெரிவித்த தகவல்கள் காண்போம்..

தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி, தீனா நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ்’. டி.ராஜவேல் இயக்கியுள்ளார்.
எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார்.

எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.இப்படம், ஆக.1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் படம் பற்றி அறிமுக இயக்குநர் டி.ராஜவேல் தெரிவிக்கையில்,

‘ஹீரோ தர்ஷன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குகிறார். அங்கு சென்ற பிறகு அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரிய வருகிறது. அவரைப் போல காளி வெங்கட் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்று கதை செல்லும். பல ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், இது தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருக்கும். வழக்கமாக ‘ரூம் மேட்ஸ்’ என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற தலைப்பு ஏன் எனக் கேட்கிறார்கள். படம் பார்க்கும்போது அதற்கான விடை புரியும். முக்கியமான காட்சிகள் வீட்டில்தான் நடக்கிறது என்பதால் அதை செட் போட்டு படமாக்கினோம்.

இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிலிம்ஸ் வெளியிடுவது எங்களுக்கு பலம். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்’ என்றார் நம்பிக்கையுடன்.

housemates movie new for tamil film industry says director
actor sivakarthikeyanhousemates moviestoryகதைசிவகார்த்திகேயன்