சசிகுமார் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியை தொடர்ந்து, ‘ஃப்ரீடம்’ படம் ரிலீஸ்..

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பது போல சசிகுமார் நடித்து வெளியாகும் அடுத்த படத்தின் தகவல்கள் காண்போம்..

சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அபிஷன் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ படம் ஜூலை 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், தற்போது சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ரிலீஸாகிறது. இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.

90-களில் நடக்கும் கதை என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக்குழு. ‘ஃப்ரீடம்’ படத்தின் டீசர், டிரெய்லர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

sasikumar freedom to release on july 10th
actor sasikumarfreedom movietourist family movieகதைசிம்ரன்