பாலா அண்ணனின் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்: சசிகுமார் பதிவு..
சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ‘சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் ’டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி […]