மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தின் கதை குறித்து, கமல்ஹாசன்..

‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியானால் கதைக்களம் மேலும் தெரிய வரும். முன்னதாக, கமல்ஹாசன் தெரிவித்த கதை பார்ப்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்பட பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் வரும் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக, வரும 17-ந்தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ கதை குறித்து தெரிவிக்கையில், ‘ இந்த படத்தின் கதையை தான் எழுதியதாகவும், அதன் பின்னர் மணிரத்னம் அதில் இருந்து ஒரு விஷயத்தை மாற்றி கிளைமேக்ஸை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் முன்னதாக ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை உருவாக்க வேண்டும் என்கிற முயற்சியில் இருந்தார். அவர் எழுதிய கதைக்கு ‘அமர் ஹைன்’ என டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ‘கதையின் நாயகன் இறந்துவிட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அவர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்பது தான் அந்த கதை என கூறியுள்ளார். இந்த கதையை மணிரத்னம் ‘தக் லைஃப்’ படமாக எப்படி மாற்றியுள்ளார் என்பதில் தான் சுவாரஸ்யமே உள்ளது என்கின்றனர் திரை ஆர்வலர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்திலும் படத்தின் ஆரம்பத்திலேயே கமல் இறப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இடைவெளியில் தான் அவர் கோஸ்ட்டாக உலாவிக் கொண்டிருக்கிறார் என தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal haasan spill the beans about thug life story

 

 

actor kamal haasandirector maniratnamthug life movieகதைதக் லைஃப்