Browsing tag

கதை

குழந்தைக்கும் யானைக்கும் இடையேயான பிணைப்பு: கும்கி-2 படம் குறித்து இயக்குநர்..

தமிழ் சினிமாவில் மைனா, கயல், தொடரி, கும்கி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். இவர் தற்போது கும்கி-2 படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, […]

நடிகர் கருணாஸின் மகன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், அப்டேட்ஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கருணாஸ். பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹீரோவாகவும் உருவெடுத்தார். இந்நிலையில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அவரே இயக்கி, படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார். ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் நாயகிகளாக ஸ்ரீதேவி, அனிஷ்மா மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் […]

தனுஷின் அடுத்த கட்டம் என்ன?

கோலிவுட்டும் டோலிவுட்டும் இணைபிரியா உறவு தானே.! அவ்வகையில், தெலுங்கில் முன்னணி இயக்குநர்களாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘சார்’ மற்றும் சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ். இந்த இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்தது. இதனால் பல்வேறு தெலுங்கு இயக்குநர்கள் தனுஷை அணுகி கதைகள் கூறிவந்தார்கள். அதில் வேணு உடுகுலா கூறிய கதை, தனுஷுக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஒ.கே சொல்லி இருக்கிறார். இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க […]

‘அந்த 7 நாட்கள்’ புதிய படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பேச்சு..

கே.பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா நடிப்பில் வெளியான பழைய திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. தற்போது அறிமுக இயக்குநர் எம்.சுந்தர் இயக்கியுள்ள ‘அந்த 7 நாட்கள்’, கே.பாக்யராஜிடம் தலைப்பை அனுமதி வாங்கி பயன்படுத்தி உள்ளனர். காதல் படமான இதில் அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் […]

‘அழகர் யானை’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் விளக்கம்..

‘அழகர் யானை’ பட பூஜை முடிந்து, தற்போது படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் கதைக்களம் பற்றி இங்கே காண்போம்.. ’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் அடுத்து இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். குறிப்பாக, 80 அடி உயர யானை ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. ’அழகர் யானை’ குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன், தெரிவிக்கையில், ‘இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை […]

ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அறிமுக இயக்குநரின் படம், மெகா வசூல் சாதனை..

பான் இந்தியா கலாச்சார ஓட்டத்தில், சிறு பட்ஜெட் படங்கள் அதனை முந்திச் செல்வது ஏன்? என்பது சிந்திக்கத்தக்கது தானே. ஆம், அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’. அதாவது, சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா. இந்த படம் பெரிய அளவில் எவ்வித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவின. ரூ.6 கோடி சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் […]

சர்வதேச பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற தமிழ்ப்படம்..

கமர்ஷியல் கதைகள் ஒருபுறம் வருந்தாலும், விருதுகளுக்கான கதைகளும் வந்து அங்கீகாரம் பெறுகின்றன. அவ்வகையில், முன்னதாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம் சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்தது தெரிந்ததே இந்நிலையில் பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கிய படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ள இந்தப் […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம், அவரது பழைய படக்கதையா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின்’ கூலி’ படமானது, தொழிலாளர் முனையங்களையும், ரகசிய கடத்தல் கும்பல்களையும் பின்னணியாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தினக்கூலித் தொழிலாளர்களை துன்புறுத்தும் ஓர் இரக்கமற்ற குற்றப் பின்னணி கும்பலை எதிர்த்துப் போராடும் ஓர் அச்சமற்ற, வறுமைப் பின்னணி கொண்ட ஒரு துறைமுக கூலித் தொழிலாளியைப் பற்றி இப்படம் பேசுகிறது. ஆற்றல், மன உறுதி மற்றும் ஸ்டைல் உடன் அவர் நீதிக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும் கிளர்ந்தெழுகிறார். இதில் வின்டேஜ் ரஜினியின் ஸ்டைல் மற்றும் லோகேஷ் […]

நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘நீலி’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இபடத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில், மனோ உதயகுமார் தயாரிக்கிறார். நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். இப்படம் அவர் கூறும்போது, ‘அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கதை உருவான விதம்: இயக்குநர் பாண்டிராஜ் சுவாரஸ்ய தகவல்..

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது: ‘இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஓர் உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவுக்காகக் குலதெய்வ கோயிலுக்குச் சென்றபோது, நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் ஆகாச வீரன் – பேரரசி. நேரில் பார்த்ததைப் படமாக […]