ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தை இயக்கும் முயற்சியில் ஆர்.ஜே.பாலாஜி..
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, பலரும் ரஜினியை இயக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவ்வகையில், ரஜினிக்காக ஆர்.ஜே. பாலாஜி கதையொன்றை கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கதை, அவர் ஏற்கனவே விஜய்க்கு சொன்னது எனவும், சில காரணங்களால் விஜய் அந்தக் கதையில் நடிக்க முடியாமல் போயிற்று எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதே கதையினை தற்போது ரஜினிக்காக மாற்றம் செய்து கூறவுள்ளார். விஜய்க்காக சொல்லப்பட்ட கதையில், ரஜினி நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு […]