சூர்யா, ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்து வருகின்றார். தற்போது இப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு குழப்பம் தொடர்ந்துகொண்டே வருகின்றது.
அதாவது, இப்படத்தின் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் இப்படம் விரைவில் வெளியாகும். பொங்கல் பண்டிகையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாக வாய்ப்புகள் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படத்திலிருந்து ஏதேனும் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என தெரிகின்றது.
முதல் சிங்கிள் பாடலின் அறிவிப்போ அல்லது ரிலீஸ் குறித்தான அறிவிப்போ படக்குழுவிடம் இருந்து வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் மூலம் சூர்யா மிகப்பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும். ‘கருப்பு’ படம் ஒரு மாஸான கமர்ஷியல் படம் என சொல்லப்படுகின்றது.
சூர்யா, மாஸ் கமர்சியல் படத்தில் நடித்து பல காலம் ஆகிவிட்டது. எனவே, இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒர்கவுட் ஆனால், அது சூர்யாவிற்கு பெரிய வசூலை பெற்று தரும் என சூர்யாவின் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.