சூர்யா-46 மற்றும் வாடிவாசல் படங்களின் தகவல்கள் காண்போம்..
வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நடைபெற்றதும் தெரிந்ததே.
படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு, சூர்யா இரண்டு வித ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது சூர்யா நெகட்டிவ் ஷேடில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.
இவை அனைத்தும் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிந்தாலும், கேட்க சுவாரஸ்யமாக இருப்பதாக தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர். உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவே அமையும்.
இந்நிலையில் ‘சூர்யா 46’ படத்தில் சூர்யா டபுள் ரோலில் நடிப்பதாகவும், அதில் ஒரு ரோல் நெகட்டிவ் ஷெட் என்றும் சொல்லப்படுகின்றது. இதுதான் தற்போது இப்படத்தின் மீதான ஹைப் பல மடங்கு உயர காரணமாக இருக்கின்றது.
இப்படம் குறுகிய கால தயாரிப்புதான். மூன்றே மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட வெங்கி அட்லூரி திட்டமிட்டுள்ளார். அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி திரைப்படம் மற்றும் லக்கி பாஸ்கர் படமும் வெற்றியை கொடுத்தது. அதே வெற்றிக்களிப்புடன் இப்பட ஷுட் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மிக இளவயது மமிதா பைஜூ கமிட் ஆகியுள்ளார். மேலும் ஒரு முன்னணி நடிகை இணையவுள்ளார் என கூறப்படுகிறது. ரொமான்டிக் கலந்த ஆக்சன் திரில்லர் மூவியாக இப்படம் உருவாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா முழு கவனம் செலுத்தவிருக்கிறார்.