‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கியுள்ள இப்படம் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தான் நடித்த ‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற நடனம் நீக்கப்பட்டதாகக் கூறிய அவர், “சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பல ஆண்டுகளாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வரும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
சினிமாவில் பணியாற்றும் அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும், எந்தக் கலைஞரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.