ஆர்.ஜே.பாலாஜிக்கு, ‘கருப்பு’ சூர்யா வாழ்த்து: ரசிகர்கள் உற்சாகம்

ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி, அவர் இயக்கியுள்ள படத்தின் முக்கிய அப்டேட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா-45’ படத்தில் சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு விதமான ரோலில் சூர்யா வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பட இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், அதையொட்டி, சூர்யா 45 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கருப்பு’ என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்காக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகர் சூர்யா கையில் அரிவாளோடு நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. இதன்மூலம் பக்கா ஆக்‌ஷன் படமாக இது உருவாகி வருவதாக தெரிகிறது.

இந்த போஸ்டரை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் பற்றி எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு குறிப்பிடவில்லை. அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு கருப்பு படத்தின் டீசர் அல்லது பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ‘கருப்பு’ போஸ்டரை சூர்யா ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

actor suriyakaruppu movieRJ Balajiஆர்.ஜே பாலாஜிநடிகர் சூர்யா