ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ.!!

ரஜினிகாந்த் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

super star rajinikanth workout video viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதும் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

முதல் நாளிலேயே இந்த திரைப்படம் 155 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக கலக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் 74 வயதில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Rajinikanthsuper starsuper star rajinikanth workout video viralVideoviralworkoutஉபேந்திராசத்யராஜ்சன் பிக்சர்ஸ் நிறுவனம்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நாகார்ஜுனாலோகேஷ் கனகராஜ்ஸ்ருதிஹாசன்