கவிஞர் சினேகனின் தந்தை காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சினேகன். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்.
நடிகை கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சினேகன் கனிகா இருவரும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
சமீபத்தில் கூட அவரது அப்பாவிடம் குழந்தைகளை கொடுத்து சந்தோஷப்பட்டு இருக்கும் வீடியோவை சினேகன் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது தந்தைக்கு 101 வயதாகும் நிலையை வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இந்த தகவலை சினேகன் அவரது instagram பக்கத்தில் வெளியிட்டு அதாவது இன்று அதிகாலை 4:30 மணியளவில் தனது தந்தை காலமாகிவிட்டதாகவும் நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரைபட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் சினேகனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றன.