சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் சூப்பர் அப்டேட்..!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

sk 26 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ப்ரோமோஷனில் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே 26 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் இந்த திரைப்படம் ஒரு டைம் ட்ராவல் படம் என சொல்லப்படுகிறது இந்த படத்திற்கு ஸ்கிரிப்ட் ரெடி ஆகி விட்டதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sk 26 movie latest update viral
Latest updatemoviesk 26sk 26 movie latest update viralviralசிவகார்த்திகேயன்பராசக்திவெங்கட் பிரபு