சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan and venkat prabhu movie music director update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து மதராசி பராசக்தி என்ற இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் எந்த இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அவரே சொல்லி இருந்தார். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது வெங்கட் பிரபு மற்றும் சிவக்கார்த்திகேயன் இணைந்து உருவாக போகும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan and venkat prabhu movie music director update
" Venkat PrabhumovieMusic DirectorSivakarthikeyansivakarthikeyan and venkat prabhu movie music director updateupdateஅமரன்இசையமைப்பாளர்சிவகார்த்திகேயன்பராசக்திமதராசி