ரோகினி செய்த விஷயம்,அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி செய்த விஷயத்திற்கு அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 07-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவை உட்கார வைத்து பேச அருண் நல்லவன் கிடையாது என்பதை சொல்லுகிறார் உடனே மீனா அந்த ஒரு லட்சம் பணத்தை கூட அருண் தான் கொடுத்தார் என்று சொல்ல அவன்கிட்ட இருந்து தான் வாங்கி கொடுத்தியா அதுக்காக தான் நான் கஷ்டப்பட்டு போய் அந்த சிந்தாமணி வீட்டில் இருந்து எடுத்துட்டு வந்தனா என்று கோபப்படுகிறார்.

அவன் பணத்தை கொடுத்து எப்படி இழுக்குறதுன்னு பார்க்கிறான் அவன் என்ன பணம் வச்சிருக்கேன் என்று காட்டுறானா என்று கோபப்பட்டு விட்டு ஒழுங்கா நான் சொல்றத கேட்டுக்கிட்டு இருக்க சொல்லுங்கப்பா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே அண்ணாமலை மீனாவிடம் இன்னொரு வாட்டி அருண பத்தி விசாரிமா நல்ல பையனா இருந்தா எல்லாருமே சேர்ந்து சந்தோஷமா கல்யாணம் பண்ணி வைக்கலாம் நாம முத்து கிட்ட பேசுறேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரவி வேலை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி வெளியில் வர சொல்லு ஒரு ஆளை அனுப்புகிறார் அவர் சொல்லியும் வராது தான் மீண்டும் இரண்டு நிமிஷம் வர சொல்லுங்கள் என்று சொல்ல ரவி வந்து எதுக்கு வேலை நேரத்தில டிஸ்டர்ப் பண்ற என்று கேட்கிறார் இவங்க தான் ரெஸ்டாரன்ட் டிசைன் பண்றதுக்காக நான் ரெடி பண்ணி இருக்கேன் நீ கிச்சன் எப்படி இருக்கணும்னு சொல்லு இவங்க பண்ணி தருவாங்க என்று சொல்லுகிறார்.

உடனே ரவி ஸ்ருதியை தனியாக அழைத்துச் சென்று இதெல்லாம் வேண்டாம்னு சொன்னா கேட்க மாட்டியா அப்புறம் பாத்துக்கலாம்னு சொன்னா எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்டு விட்டு அந்த பெண்ணிடம் வந்து ரெஸ்டாரண்ட் ஐடியா எல்லாமே என் வைஃப் பாத்துப்பாங்க அவங்களே சொல்லுவாங்க அவங்க கிட்டயே கேட்டுக்கோங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் இதையெல்லாம் கவனித்து நீத்து ஸ்ருதியிடம் வந்து என்ன ஸ்ருதி நீ சொல்றத ரவி கேக்க மாட்டேங்கிறாரு நான் வேணும்னா பேசவா என்று கேட்க, அவன் என்னோட புருஷன் அவன் கிட்ட இப்படி பேசி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். மனோஜ்க்கு விஜயா ஜூஸ் கொடுத்துக்கொண்டிருக்க ரோகிணி வந்து இன்னைக்கு 85 ஆயிரம் பிராஃபிட் கிடைத்ததாக விஜயா கையில் கொடுக்கிறார். மனோஜ் எப்படி இவ்வளவு வந்தது என்று கேட்கிறார்.

அந்த நேரம் பார்த்து அண்ணாமலையும் வெளியில் வந்து நிற்க ரோகினி பழைய பொருள் எல்லாம் வாங்கிக்கிறேன்னு சொல்லி விளம்பரம் கொடுத்து இரண்டு மணி நேரத்துல எல்லாரும் எடுத்துட்டு வந்தாங்க 2000 ரூபாய் பொருளை நான் 5000 ரூபாய்க்கு வாங்கிகிட்டு நம்மகிட்ட இருந்த புது பொருளுல வேலையை ஏத்தி வித்துட்டேன் என்று சொல்ல அண்ணாமலை இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ரோகிணி நேர்மையான வழியில் தான் நாம் பிசினஸ் பண்ணனும் அப்பதான் நம்மளுக்கு கை கொடுப்போம் இதெல்லாம் நிலைக்காது என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு செல்ல விஜயா அவர் அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பாரு என்று சொல்லுகிறார். நீங்க மனோஜ் என்கூட கடைக்கு அனுப்புங்க என்று ரோகினி சொல்ல நான் யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் ஒரு பெண்மணி என் பொண்ணு யாராவது காப்பாத்துங்க ரோட்டில் வந்து நின்று கத்த முத்துவின் காரை நிறுத்தி முத்துவை கூப்பிட்டு என் பொண்ணு விஷம் குடிச்சிட்டா என்று சொல்லி உள்ளே அழைத்துச் செல்கிறார். உடனே முத்து அந்த பொண்ணை பார்த்துவிட்டு என்னம்மா இப்படி இருக்காங்க ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணலையே என்று கேட்க பண்ணுப்பா இன்னும் வரவில்லை என்று சொன்னவுடன் முத்து நம்ம கார்ல போயிடலாம் என்று சொல்லி அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார். பிறகு என்ன நடக்கிறது? அந்தப் பெண்ணின் தாய் என்ன சொல்லுகிறார்? முத்துவின் மனம் மாறுமா? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 07-06-25
annamalaimanojMeenaMuthuRaviRohoiniSeethaShrutiSiragadikkaAasai SerialSiragadikkaAasai Serial Today Episode Update 07-06-25vijaytvஅண்ணாமலைசிறகடிக்க ஆசைமனோஜ்முத்துரோகினிவிஜயாஸ்ருதி