மீனாவுக்காக முத்து ஒரு விஷயம் பண்ண, மனோஜ் முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் மூன்று மருமகளையும் ஒன்னா பாருங்க உங்க கிட்ட சொல்லிட்டேன் எல்லாருமே ஒரு அளவுக்கு தான் பொறுமையா இருப்பார்கள் மீனா ஒன்று கோழையோ தைரியம் இல்லாத பொண்ணோ கிடையாது ரதி விஷயத்துல உன்ன வந்து எல்லாரும் அடிக்கும்போது அந்த பொம்பளையோட கைய முறிச்சவ அதனால நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்த நான் ஒரு நாள் தலை மேல அம்மிக்கல்ல தூக்கி போட்டுட்டு போயிடுவா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் மீனா படுத்துக் கொண்டிருக்க முத்து வந்து எழுப்பி தொட்டு பார்க்க காய்ச்சலாக இருக்க என்னாச்சு ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார் ஆனால் வேண்டாம் என சொல்ல சரி நான் பாட்டிகிட்ட எதாவது கேட்கிறேன் ஏதாவது போன் பண்ணுகிறார்.
பிறகு முத்து உடனே பாட்டிக்கு போன் போட்டு பேச என்னடா இவ்வளவு நாளா போனே பண்ணல இந்த பாட்டியை மறந்துட்டியா என்று கேட்க உன்னை எப்படி பாட்டி மறக்க முடியும் என்று சொல்லுகிறார் மீனா எப்படி இருக்கா அவள பத்திரமா பாத்துக்கோ என்று சொல்ல அதெல்லாம் பத்திரமா பாத்துக்கறேன் பாட்டி அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல ஏதாவது வைத்தியம் சொல்லு என்று கேட்க அவரும் கசாயம் வைத்து கொடுக்குமாறு சொல்லுகிறார் கசாயத்துக்கு என்னென்ன போட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார். சரி மீனாவுக்கு நாளைக்கு சரியான உடனே போன் பண்ணு இல்லன்னா நானே பண்றேன் பத்திரமா பாத்துக்கோ என்று சொல்லி போனை வைக்கிறார் பிறகு உடனே முத்து கிச்சனுக்கு சென்று பாட்டி சொன்ன மசாலா பொருட்களை போட்டு கசாயம் வைத்துக் எடுத்துக்கொண்டு வந்து மீனாவிடம் கொடுக்கிறார்.
மீனாவும் கசாயத்தை குடித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் கண்கலங்கி ஆழ என்னாச்சு மீனா உடம்புக்கு ஏதாவது ரொம்ப முடியலையா ஹாஸ்பிடலுக்கு போகலாமா எதுக்கு அழற என்று கேட்க உங்ககிட்ட சொல்ல வேணான்னு தான் நான் நெனச்ச ஆனாலும் என்னால மறைக்க முடியல என்று அழுகிறார். என்ன விஷயம் என்று கேட்க நான் சீதாவை அடிச்சிட்டேன் அவ என்னிடம் பேசமாட்டேன் என்று சொல்லிட்டு போயிட்டா என்று சொல்லுகிறார் ஏன் சீதா அப்படி பண்ற பொண்ணு கிடையாது என்ன ஆச்சு என்று முத்து கேட்கிறார் உடனே, சீதா உன் புருஷன் ரவுடி அவர்தான் எல்லாம் பண்ணி இருப்பார் என்று சொன்ன விஷயத்தை அதற்கு மீனா சீதாவை அறைந்த விஷயத்தை சொல்லுகிறார். கல்யாணம் ஆன உடனே எல்லாம் மாறிடுறாங்க மீனா சீதாவை சொல்லி ஒன்னும் தப்பில்லை எல்லாம் அந்த அருண் செய்ற வேல தான் அவன் குடும்பத்தை பிடிக்க சகுனி வேலை பார்த்துக்கிட்டு இருக்கான் நீ கவலைப்படாத நான் சீதா கிட்ட பேசுறேன்னு சொல்லிவிட்டு மீனாவை படுக்க வைக்கிறார்.
மறுநாள் காலையில் சத்யா சீதாவிற்கு ஃபோன் போட்டு அக்கா கிட்ட பேசினியா இல்லையா என்று கேட்க நான் எதுக்கு பேசணும் என்று கேட்கிறார் அவ தான் என்ன அடிச்சா அவர் புருஷன் மேல விட்டுக் கொடுக்காமல் பேசும்போது என் புருஷன மட்டும் எதுக்கு நான் விட்டுக் கொடுக்கணும் மாமா மேல தான் தப்பு இருக்கு அவர்தான் ரவுடித்தனமா நடந்துருக்காரு என்று சொல்லுகிறார். அவ அடிச்சது கூட எனக்கு பெருசா தெரியல ஆனா அவ விட்டு கொடுக்காமல் பேசும்போது நான் மட்டும் ஏன் இப்படி இருக்கணும் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன் ஆனா இப்ப வரைக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால எந்த வேலையும் செய்ய முடியல என்று சொல்லி அழுகிறார். இதையெல்லாம் அருண் மறைந்திருந்து கேட்டு சந்தோஷப்படுகிறார். நான் பேசமாட்டேன் என போனை வைத்துவிட்டு சீதா வந்து விட அருண் உடனே ஒன்றும் தெரியாதது போல் என்னாச்சு சீதா எதுக்கு டல்லா இருக்க எனக்கு அடிபட்டது நினைச்சு இப்படி இருக்கியா என்று பேசி விட்டு நீ எதுக்கு கவலைப்படாத என்று சொல்லுகிறார். உடனே முத்து குடிக்கிற ஒரு கோபப்படுறவரு ரவுடி என் ஆளை வச்சு அடிச்சிருக்காரு இருந்தாலும் அவர் நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைக்கிறேன் என்றெல்லாம் சீதாவிடம் பேச அதற்கு சீதா நீங்க இவ்வளவு மெச்சூர்டா இருக்கீங்க இதே மாதிரி அவரும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்ல சரினா ஹாஸ்பிடலுக்கு கிளம்புறேன் கிளம்பி விடுகிறார். பிறகு மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் ஷோரூமில் வேலை பார்க்க ராஜா ராணி வருகின்றனர். அவர்கள் என்ன கேட்கின்றனர்? அதற்கு மனோஜ் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்க்க தெரிந்து கொள்வோம்.