தமிழ் திரையுலகில் கொக்கைன் புழங்கக் காரணம் ஒரு முன்னணி நடிகர்: பாடகி சுசித்ரா அதிரடி..

பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள தகவல்கள் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:

‘சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷாவும், கீதாஞ்சலி செல்வராகவனும் என் மீது வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கொக்கைன் இருப்பதாகவும் நான் விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தார்கள்.

காவல்துறை எனது வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் சோதனை செய்தது. அவர்கள் எனது ரத்த மாதிரிகளையும் பெற்றுச் சென்றனர். இறுதியில் என் மீது தவறு இல்லை என்பதால், காவல்துறை அமைதியாக இருந்து விட்டார்கள். ஆனால், இந்த விஷயத்தை நான் ஏற்கனவே பலமுறை கூறினேன். நான் பல திரைப் பிரபலங்களின் பெயர்களை மிகவும் தைரியமாக பல பேட்டிகளில் சொல்லி வருகிறேன்.

ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பேசுகிறார் என்றால், ஆதாரம் இல்லாமல் பேசுவார்களா? என்னிடத்தில், வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்ஸ் மட்டும் 23 உள்ளது. இது மட்டுமல்லாமல் கத்தை கத்தையாக ஆதாரங்கள் உள்ளது. என் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி அவர்கள் மான நஷ்ட வழக்கு தொடுத்தார்கள் என்றால், நான் என்னிடத்தில் இருக்கும் ஆதாரங்களை வெளியிடுவேன். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.

தமிழ் திரையுலகில் இந்த அளவுக்கு கொக்கைன் புழங்க காரணம் ஒரு முன்னணி நடிகர் தான் காரணம். அவர் இப்போது துபாயில் இருக்கிறார். அவரது சென்னை வீடு பூட்டியே தான் உள்ளது. அந்த வீட்டில் ரெய்டு நடத்தினால் கொக்கைன் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு காவல்துறை இதனை விடுவதாக இல்லை. இந்த வழக்கில் மெயின் குற்றவாளியைப் பிடிப்பதில் தமிழ்நாடு காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதில் பலி ஆடு போல மாட்டிக் கொண்டது நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும்தான்.

நடிகர் கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் அரசியல் இன்ஃபுளியன்ஸ் உள்ளதால், அவர் இதிலிருந்து வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒரு மூத்த இயக்குநருக்கு அவரது இயக்கத்தில் நடித்த நடிகை ஒருவர் தான் முதன் முதலில் இந்த கொக்கைனை அறிமுகம் செய்து வைத்தார்.

அதே நடிகையை அரவிந்த் சாமி மற்றும் அர்ஜுன் ஆகியோர் மிரட்டி விட்டார்கள். இதுபோல இனிமேல் எங்களிடம் பேச வேண்டும் என்று கடிந்து கொண்டார்கள். இந்த வழக்கு விசாரணை முடிவில் பல பெரிய பெரிய நடிகர்கள் நடிகைகள், இயக்குநர்கள் சிக்குவார்கள். மற்றொரு நடிகை விநியோகித்து வருகிறார்.

அவர் இதனை அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. தனக்கு நெருக்கமானவர்களுக்கு உயர்ரக கொக்கைனும் மற்றவர்களுக்கு தரம் தாழ்ந்த கொக்கைனும் அவர் விநியோகித்து வருகிறார்’ என சுசித்ரா தெரிவித்துள்ளார். இது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

singer suchitra interview about kollywood drug case she talks
actor sri kanthactress trishasinger suchitraஅர்ஜுன்பாடகி சுசித்ரா