டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க முக்கிய காரணம் இவர் தான்.. சிம்ரன் ஓபன் டாக்..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்ததற்கான காரணத்தை சொல்லியுள்ளார் சிம்ரன்.

simran latest speech for tourist family movie

தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்து பலரின் கனவு கன்னியாக இருந்தவர் சிம்ரன். சமீபத்தில் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது சசிக்குமாருடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் சிம்ரன். அதாவது நல்ல குடும்ப கதையாக இருந்ததால் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க உடனடியாக சம்மதம் சொல்லி இருந்ததாகவும்,இது மட்டும் இல்லாமல் இன்னொரு காரணம் இருக்கிறது இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணமே சசிகுமார் தான் அவர் மிகப்பெரிய இயக்குனர் மற்றும் நடிகர் அவருடன் நடிப்பது எனக்கு பெருமை. சினிமாவில் ஜூனியர் சீனியர் என்றெல்லாம் வேதம் பார்க்கக் கூடாது திறமைக்கு முதலிடம் இருக்க வேண்டும் அந்த வகையில் சசிக்குமாருடன் இணைந்து நடிப்பதை என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன் இனி அடுத்தடுத்து குடும்ப சென்டிமென்ட் கதைகளில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் அதேபோல் ஆக்ஷன் கேரக்டரிலும் நடிக்கவும் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இவரை இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

simran latest speech for tourist family movie
latest speechmovieSimransimran latest speech for tourist family movieTourist Familyகுட் பேட் அக்லிசிம்ரன்டூரிஸ்ட் ஃபேமிலி'