அஜித்தை நேரில் சந்தித்த சிம்பு..வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு.!!

அஜித்தை கார் ரேஸ் நடக்கும் இடத்தில் சந்தித்து பேசி உள்ளார் சிம்பு.

Silambrasantr met Ajith kumar in person

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, கிஷோர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த திரைப்படம் ஆக்சன் டிராமா மற்றும் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சிம்பு அஜித்குமாரை பந்தயம் நடக்கும் இடத்திற்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பதிவிட்ட அவர் துபாயில் ஒரு நகைக்கடையை திறக்க சென்றிருந்ததாகவும் அஜித் குமாரின் பந்தைய இடம் வந்து கொண்டிருந்தது என்றும் கூறியுள்ளார். அவரை சந்திக்க வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்தேன் இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அதே நேரம் அவருக்கு பந்தயத்தின் போது தொந்தரவு செய்ய விரும்பவில்லை அதனால் நான் அவரிடம் வரலாமா என்று கேட்டேன் ஏகே சந்திக்க ஒப்புக் கொண்டார் என்னை சந்தித்த பிறகு ஏகே மிகவும் மகிழ்ச்சியாகவும் அவரது பந்தயத்தை பற்றி மிக விரிவாகவும் பகிர்ந்து கொண்டார் நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Silambrasantr met Ajith kumar in person
'அரசன்'Ajith KumarAjith RachingDubaiLatest newsSilambrasantr met Ajith kumar in person.SilambrasantrTamil cinemaviralஅஜித்கலைப்புலி எஸ் தானுசிலம்பரசன்தக் லைஃப்வெற்றிமாறன்