நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்த நடிகை சமந்தா, தொடர்ந்து மும்பையிலேயே வலம் வருகிறார். சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் இரவு மும்பையில் ஒரு ஆடம்பர உணவகத்திற்கு டின்னர் டேட்டிங்கிற்காக சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையில், ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே தனது வலைத்தளத்தில் தெரிவிக்கையில், ‘நீங்கள் விதைத்ததுதான் அறுவடை செய்வீர்கள்’ என மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இது தற்போதுள்ள சூழ்நிலையை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘தி ஃபேமிலி மேன் 2’ மற்றும் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ ஆகிய இரண்டு வெப் சீரிஸ்களில் சமந்தாவும் ராஜும் இணைந்து பணியாற்றி உள்ளனர். தற்போது நெட்ஃபிக்ஸ் தயாரிக்கும் ‘ரக்த பிரம்மாண்டம்: தி பிளடி கிங்டம்’ என்ற தொடரிலும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து சொத்துக்கள் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து வரும் ஊடக செய்திகளுக்கு, சமந்தாவோ அல்லது ராஜோ தங்கள் உறவு குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.