எனக்கு சவாலாக இருந்தது:’ரெட்ட தல’ படம் பற்றி அருண் விஜய்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்த ‘இட்லி கடை’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்​திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்​குமரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்​ளார். பிடிஜி யூனிவர்​சல் சார்​பில் பாபி பாலச்​சந்​திரன் தயாரித்​துள்​ளார். வருகிற 25-ந்தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் ஏ.ஆர்​.​முரு​க​தாஸ், முத்​தை​யா, கோகுல், கிஷோர் முத்து​ராமன், பாலாஜி வேணுகோ​பால் என பலர் கலந்து கொண்​டனர். இப்படம் பற்றி அருண் விஜய் தெரிவிக்கையில், ‘இந்தப் படத்தின் கதை என்னை வெகு​வாக கவர்ந்​தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்​போதே நான் இ​தில் நடிக்க வேண்​டும் என்று முடிவு செய்து விட்​டேன். இந்​தப் படத்​தின் முக்​கிய தூணாக இருந்​தது எடிட்​டர் ஆண்​டனி. படம் படு வேக​மாக இருந்​தது, அதைச் சரி​யாகக் கட் செய்து கொடுத்துள்ளார்.

நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்​பைக் கொடுத்துள்​ளார். இந்தப் படத்​தில் அதிக ஆக்ஷன் காட்​சிகள் இருக்​கின்றன. அது நன்​றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனை​வரை​யும் கவரும்’ என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

retta thala movie story was challenge actor arun vijay
actor arun vijayretta thalai moviestoryஅருண் விஜய்ரெட்ட தல