சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார்.
அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி. அதனை சரி செய்யும் பணியில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.
அதையெல்லாம் முடித்துவிட்டு ரஜினியிடம் ராம்குமார் பாலகிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை முழு கதையையும் சொல்லவிருக்கின்றார். அதன் பிறகு ‘ ‘தலைவர்-173’ படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
ரஜினியின் பிறந்த நாளில் ‘தலைவர்- 173’ படத்தின் அறிவிப்பு வெளியாகவில்லை. இச்சூழலில் ரஜினி சொன்ன திருத்தங்களை செய்து அது ரஜினிக்கு முழு திருப்தியை கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரஜினிகாந்த் நெல்சனின் இயக்கத்தில் தயாராகும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படம்,பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துடன் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ‘தலைவர்-173’ படப்பிடிப்பு தொடங்கும் என கணிக்கப்படுகிறது.