என் முகத்தில் சிகிச்சை செய்திருக்கிறேன்: ராஷ்மிகா ஓபன் டாக்..

ராஷ்மிகா மந்தனா புஷ்பா, குபேரா படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இப்போது நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார்.

அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.

மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அவர் அழகுக்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, விஜய் தேவரகொண்டாவுக்கும ராஷ்மிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது. இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என கூறப்படுகிறது.

rashmika mandanna facial treatment

 

actor vijay deverakondaactress rashmika mandannamarriageதிருமணம்விஜய் தேவரகொண்டா