Browsing tag

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் ‘ஹாய் நானா’ பட இயக்குனர்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய திரைப்படம் #VDxSHOURYUV, ஸ்டைலிஷ் அறிவிப்பு போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளது. “ஒருகாலத்தில் அன்பாக இருந்த கோபம்… இன்று கர்ஜனையாக மாறியுள்ளது” என்ற வரியுடன் தொடங்கும் இந்த அறிவிப்பு, படத்தின் தீவிர உணர்ச்சி மற்றும் வித்தியாசமான களத்தை வெளிப்படுத்துகிறது. போஸ்டரில், விஜய் தேவரகொண்டா உலோக சங்கிலிகளால் நான்கு நாய்களை கட்டுப்படுத்தியபடி, உறுதியான நடைப்பாதையில் முன்னேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் பலர் அணிவகுத்து வரும் காட்சியும், இது ஒரு […]

மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவித்தொகை..

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி அன்னதானம் வழங்கினர். இதையடுத்து விஜய் தேவரகொண்டா, காதல் மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் செலவு ரூ.25 கோடி?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது. திருமணம் செய்யவுள்ளனர். மார்ச் மாதம் 4-ந்தேதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும், கரிபியன் கடலில் அமைந்துள்ள காலிவிக்னி தீவுக்கு ஹனிமூன் செய்ய பிளான் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவானது, கிரெடனா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜஸ் கொகைன் […]

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் எப்போது தெரியுமா?

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போதும் நயன் தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி உள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துகொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் […]

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இப்படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். 1980-களில் கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்ட இப்படம், அடுத்த ஆண்டு டிசம்​பர் மாதம் தெலுங்​கு, இந்​தி, […]

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமணம்; உதய்பூரில் ஏற்பாடு..

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் நடைபெறவுள்ள திருமண நிகழ்வு பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இப்படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் ‘டியர் காம்ரேட்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இவர்கள் சுற்றுலா சென்று வருவதும் வழக்கம். இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் ஹைதராபாத்தில் […]

என் முகத்தில் சிகிச்சை செய்திருக்கிறேன்: ராஷ்மிகா ஓபன் டாக்..

ராஷ்மிகா மந்தனா புஷ்பா, குபேரா படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இப்போது நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார். அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் […]

விஜய் தேவராகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு, நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே.குமார். ஆனால், அப்படம் பெரும் பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டது. இதனால், தனது அடுத்த கதைகளை பல நாயகர்களிடம் கூறிவந்தார் விக்ரம் கே.குமார். தற்போது அவர் கூறிய கதையொன்று மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. விக்ரம் கே குமார் – விஜய் தேவரகொண்டா இணையும் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பத முடிவாகவில்லை. தற்போது ராகுல் சங்கரந்தியான் மற்றும் ரவி கிரண் […]

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

தில் ராஜு – சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !! ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா […]

மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு அறிவிப்பு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் அவருடைய கட்சியினர் ‘கிங்டம்’ பேனர்களை கிழிக்கத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து படத்தினை தயாரித்துள்ள சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. […]