விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் ‘ஹாய் நானா’ பட இயக்குனர்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய திரைப்படம் #VDxSHOURYUV, ஸ்டைலிஷ் அறிவிப்பு போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளது.

“ஒருகாலத்தில் அன்பாக இருந்த கோபம்… இன்று கர்ஜனையாக மாறியுள்ளது” என்ற வரியுடன் தொடங்கும் இந்த அறிவிப்பு, படத்தின் தீவிர உணர்ச்சி மற்றும் வித்தியாசமான களத்தை வெளிப்படுத்துகிறது. போஸ்டரில், விஜய் தேவரகொண்டா உலோக சங்கிலிகளால் நான்கு நாய்களை கட்டுப்படுத்தியபடி, உறுதியான நடைப்பாதையில் முன்னேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் பலர் அணிவகுத்து வரும் காட்சியும், இது ஒரு சக்திவாய்ந்த அணியின் பயணத்தை குறிக்கிறது.

‘ட்ரீம் கலெக்டிவ்’ என அழைக்கப்படும் இந்த படைப்புக் குழு, உலகளாவிய திறமையாளர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை மிக்க அணியாகும். “That’s A Rover” என்ற தீம் பாடலும் வெளியிடப்பட்டு, வாழ்க்கையின் சவால்களை தாண்டி மீண்டும் எழும் மனவலிமையை வலியுறுத்துகிறது.

இந்த திரைப்படம், புராண உணர்வுகளை தழுவிய ஒரு கற்பனை உலகில் அமைந்துள்ளது. பழமையும் புதுமையும் கலந்த இந்த பிரபஞ்சம், பாரம்பரிய எல்லைகளை மீறி ஒரு புதிய காட்சி அனுபவத்தை உருவாக்குகிறது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து தன்னை மாற்றிக் கொண்டே வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தின் மூலம் இன்னொரு பரிணாம வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார். உணர்ச்சி ரீதியாகவும், காட்சியமைப்பிலும் மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்த படம், அவரின் கரியரில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“Hi Nanna” மூலம் கவனம் பெற்ற சௌர்யுவ், இப்போது இந்த பிரம்மாண்ட படைப்பின் மூலம் தனது கலை பார்வையை மேலும் உயர்த்த முயற்சிக்கிறார். Vyra நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகும் இந்த படம், சர்வதேச தரத்தில் உருவாகும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவாளராக Alejandro Martinez, தயாரிப்பு வடிவமைப்பாளராக சுரேஷ் செல்வராஜன், VFX மேற்பார்வையாளராக Eric Durst, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், படத்தொகுப்பாளராக பிரவீன் ஆண்டனி, ஆடை வடிவமைப்பாளராக சச்சின் லோவாலேக்கர் ஆகியோர் இணைந்துள்ள இந்த தொழில்நுட்பக் குழு, படத்தை உலகத் தரத்தில் உருவாக்கும் என நம்பப்படுகிறது.

மொத்தத்தில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திறமையாளர்கள் இணைந்து உருவாக்கும் இந்த #VDxSHOURYUV படம், இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் செல்லும் முயற்சியாக உயர்ந்து நிற்கிறது.

director ShouryuvHi NannaVijay Deverakondaவிஜய் தேவரகொண்டா