விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார்.

ரவி கிரண் கோலா இயக்​கும் இப்படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

1980-களில் கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்ட இப்படம், அடுத்த ஆண்டு டிசம்​பர் மாதம் தெலுங்​கு, இந்​தி, தமிழ், கன்​னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்​கிறது.

இதன் டைட்​டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதில் கையில் அரிவாளு​டன் ரத்​தம் தெறித்த உடலுடன் வெளியாகி​யுள்ள விஜய் தேவரகொண்டா தோற்​றம் மிரட்​டலாக இருக்​கிறது. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பை தொடர்வதுபோல, ராஷ்மிகாவும் தொடர்வாரா என தேவரகொண்டாவிடம் நெட்டிசன்ஸ் கேட்டு வருகின்றனர்.

vijay devarakonda and keerthi suresh at 80s story based movie
actress keerthy sureshmarriagevijay devarakondaராஷ்மிகா மந்தனாவிஜய் தேவரகொண்டா