சாதனை படைத்து வரும் ராம்சரணின் ‘பெத்தி’ டிரைலர்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக ராம் சரண் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கிரிக்கெட், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டு காட்சிகள் டிரெய்லரின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளன.

ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். A.R. ரஹ்மானின் இசை, R. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மற்றும் அவினாஷ் கொல்லாவின் பிரம்மாண்ட கலை அமைப்பு டிரெய்லருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் விருத்தி சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள “பெத்தி”, வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Global Star Ram CharanJagapathi BabuJanhvi KapoorPeddiShiva Rajkumar