ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்..
‘கூலி’ படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர்-2 படத்தில் இணைந்துள்ளார். முதல் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்பக் குழுவினர் ‘ஜெயிலர் 2’ படத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
அவ்வகையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஷுட் தற்போது நடைபெறுகிறது. படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களுடன் தெலுங்குப் பட ஸ்டார் பாலகிருஷ்ணாவும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ‘ஜெயிலர்’ முதல் பாகத்திலேயே பாலகிருஷ்ணா கெளரவ வேடத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவரது கதாபாத்திரம் சரியாக அமையவில்லை என இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். இந்த முறை பாலகிருஷ்ணாவை படத்தில் சேர்ப்பது உறுதி என்று கூறப்படுகிறது.
மேலும், படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இதனால் பான் இந்தியா படமாக ‘ஜெயிலர் 2’ தயாராகி வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டிருப்பதாக கூறியுள்ள அவர், வருகிற டிசம்பர் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ஜெயிலர் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.