‘கூலி’ படத்தின் டிஜிட்டல் & சாட்டிலைட் விற்பனை எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கூலி’ படம் நாளை மறுநாள் ரசிகர்களால் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

முன்னதாக ‘கூலி’ படத்தின் டிஜிட்டல் உரிமம், இசை உரிமம், சாட்டிலைட் உரிமம், ஓவர்சீஸ் உரிமம் உள்ளிட்டவை மூலம் படத்திற்கு சுமார் ரூ. 250 கோடி கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ. 50 கோடி கிடைத்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ‘கூலி’ படம், நிச்சயம் பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் டிக்கெட் முன்பதிவு மூலம், இதுவரை ரூ.10 கோடி வந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரிலீஸான முதல் நாள் வசூலில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ‘கூலி’ ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் அதற்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கி விளாசாமல் இருப்பது நல்ல விஷயமாகும். வலைதளங்களில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் வந்துவிட்டால், அதன் வசூலை தடுக்க யாராலும் முடியாது. அவ்வகையில், படமும் நாகர்ஜூனா, அனிருத் கூறியதைப்போல ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறினர். ஆதலால் ‘கூலி’ படம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 1000 கோடியை எளிதாக வசூலிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

rajinikanth in coolie movie reportedly collects rs 250 crores
collectioncoolie movieRajinikanthசன் பிக்சர்ஸ்ரஜினி