ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் ஓடிடி.யில் வெளியீடு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை கடந்து, வசூலில் சாதனை படைத்துள்ளது. அனிருத் இசையமைத்த இப்படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. 3 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக கடந்த தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, இந்த சாதனையை விஜய்யின் ‘லியோ’ வைத்திருந்தது. இது 5 நாட்களில் அதை எட்டியது.

‘கூலி’ படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.500 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.500 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது தமிழ் படமாகவும், ரஜினிகாந்தின் மூன்றாவது படமாகவும் ‘கூலி’ அமைகிறது.

இந்நிலையில் ‘கூலி’ திரைப்படம் வரும் 11- ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

rajinikanth in coolie movie ott release date announced
coolie movieollectionRajinikanthரஜினிகாந்த்லோகேஷ் கனகராஜ்